இருள் வெளிச்சம்

This entry is part of 35 in the series 20061102_Issue

சாமிசுரேஸ்,சுவிஸ்


புல்வெளியின் காற்றினிடை
தனியனாய் நிற்கிறேன்
எதையோ தேடி

நுகர்வுத்திசுக்களின்
ஓவ்வொரு அணுவிலும்
குழந்தைகளின் கதறல்

வரலாறு தேடி
மயானங்களில் அலைகிறது விழி

நிலப்பரப்பில்
பற்றில்லாக் கால்களுடன்
ஒரு கனிதேடி
கிளைகளிடையே பரபரத்தபடியே
கைகள் மௌனமாகின்றன

மறுபடி மறுபடி
கொலைகொள்பரப்பின்
விருட்சப்படிவுகளின்மேல்
உறைந்துபோகின்றன உயிர்ப்பூக்கள்

இரவுக்குமிழ்களை
உதிர்த்துத்தள்ளியபடி
முன்னேறுகிறது
வாழ்க்கை முடிவிலி

என்
சிரசின் நுனியில்
ஒன்பது முகங்கள்
ஒவ்வொன்றும்
நம்பிக்கை சுமந்தபடி
பார்வைவழியே வழிகின்றன


01.11.2006

sasa59@bluewin.ch

Series Navigation