கீதாஞ்சலி (96) – எனது பிரிவுரை!

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


இவ்வுலகை விட்டு நீங்கும் போது,
நான் கூறப் போகும்,
பிரிவுரை இதுவாக இருக்கும்:
பூமியில் நான் கண்டது உன்னத மானது!
தாமரைப் பூவில் மறைந்துள்ள
தேமதுவைச் சுவைத்தேன்!
விரிந்து அது ஒளிக்கடலாய்ப்
பரவியது எனக்கோர் வெகுமதி!
அது நான் கூறும் பிரிவுரை யாகட்டும்!
முடிவில்லாத
வடிவங்கள் கொண்ட,
இந்தப் பந்தய அரங்கில்
முடிந்தது என் விளையாட்டு!
வடிவ மற்ற ஆதிமூலனின்
மகத்தான தோற்றத்தைக்
கண்டேன்!
எவருக்கும் எட்டாத அவனது
தொடுகையால்
என் உடல் பூராவும்,
எனது உறுப்புகள் அனைத்தும்,
பூரித்துப்
பொன்னூஞ்சல் ஆடின!
அது நான் கூறும் பிரிவுரை ஆகுக!
என் ஆயுள் முடியட்டும்,
நீங்கும் வேளை எனக்கு
நெருங்கி விட்டால்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 22, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா