சிந்தனையில் சிலநேரம்

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

சக்தி சக்திதாசன்



சிந்தனையில் சிலநேரம்
சிக்கி நானும்
சிறைகொண்ட நினைவுகளை …..

வியாபாரம் வாழ்க்கையெனும்
விசித்திர வர்க்கமொன்றில்
விழுந்திட்ட வேளையிது
வினாக்களுக்கு ……
விடை உண்டா ?

எத்தனை பொழுதுகள்
என்னென்ன கொள்கைகள்
அத்தனையும் கனவுகள் … ஏனெனில்
அதுதான் நிஜங்களாம்….

விரயத்தின் உச்சத்தில்
வீணாக வாழ்ந்துமே
விளக்கத்தை மறந்து .. நாம்
மீண்டும் இருட்டுக்குள்

தடுக்கித் தடுக்கி விழுந்து
தவழ்ந்து கரைக்கு வந்து விட்டோம்
திரும்பினால்… அதேபோல்
பலநூறு தத்தைகள்
கைகொடுக்க முன்வரா
கல்லாகிய உள்ளங்கள்

கண்மூடும் வேளயிலே
கடக்க முடியா பள்ளத்துள்
பாவம் பல சிறுவர்கள்
ஏணி வாங்கப் பணமிருந்தும்
ஏனோ …..
மனசில் மட்டும் ஆசையில்லை…

சிந்தனையில் சிலநேரம்
சிறையாகிய நினைவுகள்
கைநிறையப் பலமிருக்கு
தோழனே … ஏனோ
சிறையுடைக்க மட்டும்
மனமில்லை


Series Navigation

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்