பார்வதி வைத்த பரவசக் கொலு!

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

கவியோகி வேதம்


கும்மிஅடி பெண்ணேநீ கும்மியடி-பார்வதிக்
..கொலுகண்டுத் துள்ளியே கும்மியடி!(கும்மி)
.
இம்மியும் ‘நேர்த்தி’ப் பிழையின்றி-எழில்
..இயற்கையும் கொஞ்சுதென்றே கும்மியடி!
பொம்மைகள் நம்முடன் பேசுதல்போல்-வைத்த
..புதுமைப் பரவசம் பொங்குதடி!..(கும்மி..)
.
சிவனா’ரின் கோவிலும் கெஞ்சுதடி-என்னைச்
..”சிந்தி’லே பாடென்று சொல்லுதடி!
அவரைச் சுற்றியகு ளத்தினிலே-பலே!
..ஆம்பலும்,மீனுமே பாடுதடி!(கும்மி)-
.
மாமி உழைத்துசெய்த பாங்கினிலே-உயர்
..மாமர நற்குயில் கூவுதடி!
மாமிகள் பக்கத்து வீடிருந்தே-வந்து
..மயங்கியே பாடுறார் கேளுங்கடி!(கும்மி)-
..
காட்டில் அடர்ந்திடு சோலைகளும்-கொஞ்சிக்
..கருணை பொழியும்ஸ ரஸ்வதியும்,
மீட்டி இலைகளை, வீணைதன்னை,-நம்முள்
..மிக்கப் பிரமிப்பைத் தந்தாரடி!(கும்மி)
..
கிராமத்துக் காட்சியும் நெற்கதிரும்,-கண்டு
..கிறுகிறுத்துப் போனதும் உண்மையடி!
மராமத்துச் செய்கிற பாவனையில்-சிலர்
..மண்வெட்டி தூக்குதல் விந்தையடி!(கும்மி)
..
படிபடி! என்றே படிப்படியாய்_-பசங்க’
..படிக்கிற பொம்மை-ஸ்கூல் நேர்த்தியடி!
அடிதடிப் போலீசுப் பொம்மைகளும்-இங்கு
..அற்புத வர்ணத்தில் மின்னுதடி!(கும்மி)
..
பார்வதி அம்மையார்க் கொலுவினிலே-சிங்கம்
..பசுபோலே சாதுவாய் நிற்குதடி!
ஆர்வமாய் ஏரியில் மான்களும்-யானையும்
..அழகாக நீரை உறிஞ்சுதடி!(கும்மி)
.
விஷ்ணுத்’த-சாவதாரப் பொம்மையும்-இங்கே
..வேண்டும் வரங்களைத் தந்திடுமே!
கஷ்ட வினை’கள் ஒழிக்கஎன்றே-ஆயுதம்
..கையில் தரித்து(உ)ம்மைக் காத்திடுமே!
..
செட்டியார்ப் பொம்மையைப் பாருங்கடி!-அவர்
..சேர்த்தப-ருப்புவகை விந்தையடி!
கொட்டிய காய்கறி விற்றுநிற்கும்-அந்தக்
..குறுகுறுவி ழிப்பையன் ஜோர்தானடி..!
..
உச்சிப்பிள் ளையாரின் கோவிலடி!-எவ்வள(வு)
..உயரப் படிகள்தாம்!காணுங்கடி!
மெச்சும் விதத்தில்நம் ‘பார்வதியார்’க்-கொலு
..வித்தகக் காருண்யம் பாடுங்கடி!
.
ரங்கோலிக் கோலத்தில் நம்முருகன்!-மின்னும்
..ரம்மிய ‘வேலை’யும் நோக்குங்கடி!
இங்கே சிருங்கேரி சாரதையின்–அருள்
..ஏற்றமும்,நல்லழகும் போற்றுங்கடி!!(கும்மி)
..
பார்த்த அதிர்ச்சியில் நாம்மயங்க-உடன்
..படுக்கஆஸ் பத்ரியும் உள்ளதடி!
கோர்வையாய் வெள்ளுடை நர்ஸ¤களும்-நின்று
..கொஞ்சியே “ஒத்தடம்’ வைப்பரடி!
..
கும்மியடி பெண்ணேநீ கும்மியடி-பார்வதிக்-
.கொலுகண்டுத் துள்ளியே கும்மியடி!
*****************(யோகியார் வேதம்)1-10-06


ஓம் சக்தி!!
1-10-06-ஞாயிறு..சரஸ்வதி பூஜை தினம்..ஜோராகக் காரில் என் மகன்’சுவாமி ஓட்ட, குடும்பத்துடன் நியூ ஜெர்ஸி சிவா(தேவாரம் சுப்ரமண்யம்)வீட்டில் இறங்கினோம். பலத்த வரவேற்பு.உபசரிப்பு. பின் அவரது தாயார்-(பார்வதி)-அமைத்த கொலுவுக்கு அவரும் துணைவியார் வசந்தியும் எங்களை அழைத்துப்போனார்கள்..பார்த்தால்!அசந்துபோனோம். வீட்டின் கீழ்த்தளம் முழுக்க அடைத்த-அமைத்த ப்ரம்மாண்டக் கொலு!-அந்தக் கனிந்தமுகத்தாயாரின் கருணை மிக்க விவரிப்பு.ஓர் ஆங்கிலப் படம் பார்த்த பிரமிப்பு.
அது பற்றிய இதோ என் வர்ணனைக் கவிதை..எப்படி உளது என் கவிக் கொலு..?
நீங்களே உடனே’கமெண்ட்’ அடிக்க வேணும்..(யோகியார்)-

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்