மெளன அலறல்

This entry is part of 36 in the series 20061006_Issue

கே. ஆர். மணிதேர்தலில் நிற்காமலே
கரைந்துவிட்ட அரசியல்
கட்சிபோல
ஜனிக்காமலேயே மரணித்த
பாக்கியவான் – நான்.

நான் கொஞ்சம் உயிர்
கொஞ்சம் உடம்பு.
கொஞ்சம் பிணமும் கூட.

அவர்களின் கண்ணீர்
என் கரைதல் பொருட்டுல்ல.
என் கருவறையே
கல்லறையாய் போனதால் அல்ல.

அவர்களின்
நம்பிக்கைகோட்டை
நசுங்கிப் போனதால்.

ஒருபெரும் அழுகை
சில தொடரும் விசும்பல்கள்
வருத்தம் தெரிவிக்கும்
கார்டுகள்
வாயிலிருந்து சோகமாய் பல
‘சாரி’க்கள்
இப்படியான் ஆடம்பரங்களில்
கரைந்தே காணமல் போகும்

என் மெளன அலறல்.
mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி