யாருமற்ற கடற்கரை

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

ஹெச்.ஜி.ரசூல்


நீயும் நானும் கட்டிவிளையாடிய
மணல்வீடு
கலைத்துப் போட்ட அலைகளுக்கு
மனசில்லை
*
திடீரென பேரலை ஒன்று
அதிர்ச்சியூட்டி
உன்னை இடுப்பளவு
நனைத்துச் சென்றபோது
கடற்கரையே குலுங்கும்படி
வாய் விட்டு சிரித்தாய்
நானோ நனைந்தவாறு
கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்.
*
எல்லோரும் போய்விட்டார்கள்
ஒற்றையில் நின்றிருந்தேன்
இருளைப் போர்த்திய
தனிமையின் நிரந்தரம்
எதையும் ரசிக்க மனமில்லை
கரையைத் தொட்டுத்
திரும்பும் அலைகள்
*
தொலைவிலிருந்தாலும்
எப்போதும் காதுகளில்
பீதி நிரப்பப் படுகிறது
அலைகளின் பேரிரைச்சல் சத்தத்திலிருந்து
இன்னும் விடுபடமுடியவில்லை.
தூக்கமற்ற குழந்தைகளுடன்
மணல்வீடு நனைகிறது.
எல்லாவித பதட்ட்ங்களோடும்
இன்றைய இரவும் சுழல்கிறது.
————————————
mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்