தென்னையின் வடிவு

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

டீன்கபூர்


தென்னையின் வடிவு

அழகிய தென்னை.
நன்கு உரமிட்ட உடல்வாகு.
காற்றினில் மேயவிட்ட கருமேகம்
தென்னையின் கொண்டையில் சிக்கிக்கிடந்ததாய்
விரித்துக்கிடக்கும்.
மயில் அகவி தோகையில் படிந்து.

அக்காலம் இனி…. இக் காhலம்,
மயிர்போல உதிரும் மனிதன் உயிர்போல.
காலாலே உதைத்துப் பார்க்கும்.
குரும்பை ஒன்றுக்குள் குளிர்நீர் நா நனைய.
தாகத்தை நாக்கில் சுமக்கும் அண்டங்காகம்.

தேங்காயின் விலை பற்றி
சுழற்காற்று சொல்லுமா?
அது போடும் ஜாலம் புரியுமா?
பேயாட்டம் அது ஆடும் போது
பக்கத்து வீட்டு கூரை கத்துவதுகேட்டே
அதன் கழுத்தில் அரிவாளை வைத்தேன்.

பாளை வெட்டி
செப்புக் குடத்தில் அவள் சிரிப்பாக அதை விரித்து
உலர்ந்து கழன்று போகும்வரை
மணவறையில் அது இருக்கும் வடிவு.
சொர்க்கத்தில் மனம் ஒருமிக்க
அக்கால மலர்கள்.
அழகோடு சங்கமிக்க அனுபவங்கள்
தென்னையின் குருத்து அறையில் அழகுடனே.
முட்டிப்பாய்ச்சியது நீறாறு விழிமடலை.
“மரமேறி” சரித்து வடித்தான்
நேற்றியில் பூவல் தோண்டி.

காதலி உலரவிட்ட சேலைபோல
குருத்தோலை விரிந்து நெஞ்சை நிறைக்கும்
காமம் காற்றோடு ஆடும்.
காய்க்கிறது குலை கட்டி
மண்முட்டிகளாய் அதன் உருவம்.
எக்குயத்தி தென்னையிலே ஏறினாளோ

அழகிய தென்னை
என்காதலியின் ஒய்யாரம் தெரிகிறது.
காக்கையைப் பற்றிய கனவொன்றும் பாய்ந்தது
கரையும் காக்கைகளில்
சோக முகத்தோடு ஒரு காகம்
மின்;கம்பமொன்றில் தொங்குவது கண்டேன்;.
எவன் அடித்துவளத்தினானோ.
வாசலைப் பெருக்கி
மீன் குடலை அவித்து உண்டு
அது வாழ்ந்த தென்னை ஞாபகத்தை நடுகிறது.
இன்னொரு பிள்ளையாக.

டீன்கபூர் – இலங்கை
deengaffoor7@yahoo.com

Series Navigation

டீன்கபூர் - இலங்கை

டீன்கபூர் - இலங்கை