சிரிப்பு

This entry is part of 48 in the series 20060203_Issue

தேவமைந்தன்


சிரிப்பு வந்தது.
காரணம் மனிதம்.
சிரிக்கையில் புரையேறியது.
கண்ணீர் சிரிப்பின் ஊடே தெறித்தது.
பனிநேரக் கார்க்கண்ணாடியின் மங்கல்
‘பாலே ‘ ஆடித் துடைக்கும்
‘வைப்பர் ‘ துடைப்பான்
விடும் இடம் இடையே
சாலை மனிதர் தெரிவதுபோல
சிரிப்பின் காரணர் தெரிந்தனர்.
தெரிந்ததால் மீண்டும் சிரிப்பு வந்தது.
உங்களுக்குத் தெரியுந்தானே..
‘ஜோக் ‘ அடித்துவிட்டு,
தான் தன் முகத்தை ‘சீரியஸாக ‘
வைத்துக் கொள்பவர்களை ?
மீண்டும் சிரித்ததால் குத்தி
இருமல் கடுத்தது.
சிரிக்கச் சிரிக்க வயிறும் வலித்தது.
அதனால் என்ன ?
‘வாழத் தெரிந்த ‘ ஒருவர் வீட்டு
வரவேற்பறைச் சுவரில்
வருபவர் கண்களை உறுத்த
அன்னார் எழுதிவைத்துள்ள
திருக்குறள் வாசகம் –
‘ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. ‘
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation