தேவதை உறக்கம்

This entry is part of 24 in the series 20051202_Issue

பாஷா


நட்சத்திர தோழர்களுடன்
நிலவு ஜன்னல் வழி பார்க்கும்
நிசப்த இரவில் ஒரு
தேவதை உறக்கம்
என் படுக்கையெங்கும்
பரவி கிடக்கிறது!

பிரபஞ்ச சாளரங்களை
துளைத்து வந்து
இமை ஊடுருவி அதன்
உள்ளுக்குள் உறைந்திருக்கிறது
ஒரு தேவ அமைதி!

மழைக்கால சிலிர்ப்பாய்
தோன்றி மறையும்
உதட்டு புன்னகையுடன்
‘போடா… ‘வென்ற செல்ல சிணுங்கல்கள்
உறக்கத்தின் படைப்பாய் ஒரு
தேவதை கனவு!

மெல்ல தலைகோத
கருவறையில் இருக்கும்
குழந்தையாய் என்
மார்பு கூட்டுக்கிடையில்
மடங்கி கிடக்கிறது!

மலர்ந்து சிரிக்கும்போதுமட்டுமல்ல
மஞ்சத்தில் உறங்கும்போதும்
மலர் அழகே!
—-

Series Navigation