இவ்வாறாக, நான் நூலகர் ஆகிப்போனேன்!

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

தேவமைந்தன்


பன்னிரண்டு வயதில் எக்கிநின்று
மரத்தில் மேடை உயர்த்திய
புத்தக வாடகைக் கடையில்
இரண்டு நாவல் ஒரு ரூபாய்க்காய்
வார வாடகைக்கு எடுத்துச் சென்று
வீட்டுக்குப் போய்ப் படித்து
நிம்மதியாய்
திருப்பித் தந்தேன். சுமையில்லை. தூசியில்லை.
வேலை கிடைத்த பிறகு
நண்பர்கள் புதிது புதிதாய்
புத்தகங்கள் புதிது புதிதாய்…சேர
ஆரம்பத்தில் எல்லாம் சுகமே!
முதல் ‘டிரான் ?ஃபர் ‘ வந்தபொழுது
புத்தகங்களோடு புதிய ஊருக்குப் பெயர்ந்தேன்.
முதல் நாளே புதிய நண்பர் புதிய விதமாய்
விசாரித்தார். ‘ ‘என்ன, பாவச்சுமைகளை இங்கும்
கொண்டுவந்துவிட்டார்களாமே ? ‘ ‘
அப்புறம் அடுத்தடுத்துப் புதிய புத்தகங்கள்
புதிய மனிதர்கள் புதிய மாற்றல்கள்
புதிய மாற்றங்கள் எல்லாம் சரிதான்
புதியவை பழையவை ஆகின. மேலும்மேலும்
புதியவை பழையவை ஆகி,
தூசும் தும்மலும் சேர்ந்தன.
வாடகை வீடுகள் மாற,மாற
பாறாங்கற்களாய்க் கனத்தன புத்தகங்கள்.
‘ரிடையர் ‘ ஆனபின், பழையவை புதியவை
ஒப்பாய்க் கணக்கெடுத்து பேரேடு பதிந்து
(இப்பொழுதுதான் சித்ரகுப்தனின் பெருமை தெரிகிறது)
‘ரேக் ‘குகள் வாங்கி ( ‘ ‘செலவு வைக்கிறார் பாரேன்! ‘ ‘)
குடும்பத்தார் அவ்வப்பொழுது உதவ
( ‘ ‘இவருக்குத்தான் தலையெழுத்து..நமக்குமா! ‘ ‘)
இடுப்பு முதுகு இவற்றின் இருப்பை
வலிகள் தெரிவிக்க,
இடப்பற்றாக்குறை இளக்காரமாய் நோக்கி இளிக்க,
விடாமல் வேதாளம் இறக்கித் தோளில் சுமந்த
விக்கிரமாதித்தனாய்,
‘சை ? ‘ வாரியாய் ‘சப்ெ ?க்ட் ‘ வாரியாய்
அடுக்கி மாற்றிக் கலைத்து,
மீண்டும் அடுத்த நாள் அடுக்குமுன்
உறைத்தது… ‘ ‘பத்து நாளாய் புத்தகம் ஒன்றாவது வாசித்தோமா ?..
அட…கடைசியில்
நூலகர் ‘ஆகி ‘ப் போனேனே நான்;
வாசகனாய் ‘இருந்தது ‘ ? ? ? ? மறந்து.. ‘ ‘
****
pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்