அலறியின் மூன்று கவிதைகள்

This entry is part of 22 in the series 20051014_Issue

அலறி


நரகில் தள்ளும் பாலைவனப் பாதை

அாிசி ஆலை தோற்கும்
பஸ்ஸின்
நடு ஆசனத்தின் வலதுபக்கம்
பட்டியில் கட்டிய ஆடுபோல
அடைக்கப்பட்டிருக்கின்றேன்.

ஆரை மணி இடை வெளியில்
புறப்படுவதான பஸ்
இரைந்து மூச்சிழுத்துக் கொண்டிருக்கிறது
இன்னும் நூறு மனிதக்கட்டிகளை
விழுங்கி ஏப்பமிடும் முனைப்பில்

தலை நகா; நோக்கிப் பயணம்
காற்றில் மிதக்கும் சுகம்
மலையடிவாரம் அடையும் மகிழ்வை
தந்ததில்லை ஒரு நாளும்

நகரும் ஒவ்வொரு அங்குலமும்
மிக நீளமானது
அடிக்கொரு படை முகாம்
அதையொட்டிய சோதனை சாவடி
பூியாத மொழி

பயணத்தில் கைகோர்க்கும்
ஆறுகள் இடையில் ஒடிவிடும்
சூாியன் பாதியில் இடறி விழும்
காட்டு மரங்களை கடைந்து வீசும்
வாசம்
மனித வெக்கையில் கரைந்து விடும்

விரண்டோடும் பாதையை
துரத்திக்கொண்டிருக்கும் வாகனம்
அதன் கால்களுக்குள் சிக்கி
காற்று நசுங்கிக்கொண்டிருக்கும்
இரவின் கண்கள் உடைந்து கொண்டிருக்கும்
என்னைப்போல.

பாதையும் பயணமும்
ஒடிக்களைத்து
ஒரு புள்ளியில் சந்தித்து
நகாின் நொிசலுக்குள் தள்ளி விடும்

நீண்ட நெடும் பயணம்
நிறம்மாறிய நகரம்
இரண்டையும் நினைக்கையில்
எனக்குள்
ஏழு பாலை வனப்பாதை விரிகிறது
ஏழு நகரம் ஒன்றாய் கதவு திறக்கிறது

நிழல் தேடும் சூாியன்

முன்னொரு காலத்தில்
எனதூாில்
கட்டிடங்கள் கா;ப்பமாவதில்லை
பட்டியாய் பல்கிப் பெருகவில்லை
ஈன்று தள்ளியதெல்லாம்
மருதை
வாகை வம்மி

மூன்று தசாப்;தம் முடிவதற்குள்
கல் மண் கலவி உச்சத்தில்
பிறந்ததெல்லாம்
சுவர்கள்
கூரை உயர்ந்த வீடுகள்
கட்டிடக்காடுகள்

வீடுகளில் முற்றமில்லை
முன்வாசலில்லை
கோடிப்பக்கம் கறிமுருங்;கை
பூப்பதில்லை
காற்றள்ளிக் கொட்டும்
மாவில்லை வேம்பில்லை
காகம் கரைய கொப்பில்லை

வீடுகள் காய்த்து
கிளைபரப்பி நெடிதுயர்கிறது
தென்னை தோற்று
தலை சவட்டிக் குனிகிறது

இரட்டை மாடிகள்
வளர்ந்து
வளர்ந்து
வான்முகடு கிழியும் விரைவில்

முந்திாி விரும்பிய கிளிகள்
கொட்டைப்பாக்கான் குருவிகள்
வனாந்தரங்களுக்கு
திசை பிாிந்து விட்டது

பட்டமரம் தேடிய மரங்கொத்தி
கருங்கல் தூண்களில்
அலகுடைக்கிறது

வூகை நான்கும்
வம்மி ஐந்தும்
கடைசி பூவையும் பிஞ்சையும் உதிர்த்து
ஒற்றையாய் நிற்கிறது
வோில் துளி நீரும் காய்ந்து கொண்டிருக்கிறது
மரங்கள் வற்றிய ஊாி;ல்
நிழல் தேடி அலைகிறது சூாியன்;.

போயின போயின காலங்கள்

பெரும் மழை ஒய்ந்து
பேய்க் காற்று வீசுகிறது
ஆத்து வாழை இலைகளை
அள்ளிச் செல்கிறது காற்று
நீாில் படரும் தாமரை
ஆழத்தில் புதைகிறது

இரவு
சிறு மழைதானும் பெய்யவில்லை
மழையின் குறியீடாய்
ஒரு கோட்டு மின்னல்
ஒரு முழ இடி இல்லை வானில்
அதிகாலை
ஊசித் தூறல் விழுந்து
அடை மழையில் அமிழ்கிறது குளம்

குளத்தை கொத்தி செல்கிறது மீன் கொத்தி
சுழிக்கும் நீரலையில்
போருக்கு முன் கழிந்த காலங்கள்
நெஞ்சில் துயர் பிடித்து கவிக்கிறது

அன்றைய நாட்களில்
ஆத்து வாழை குடும்பமாய் பூத்து
ஊதாப்பூக்;கள் சிாிக்கும்

மாாிவானம் இருண்டு
ஒரு பாட்டம் சாிந்தால் போதும்
குட்டி மாவலி குதிக்கும்
கொத்து மல்லி பூ உதிரும்
கொட்டைப்பாக்கான் கொடுகும்

பக்கத்து ஊர்களில் இருந்தும்
குடைக்குள் நனைந்து
ஆட்கள் வருவார்கள்
தூண்டிலும் வலையுமாய்
கரையில் குந்திக் கொள்வோம்
படுவான் கரைப்பற்றைக்குள்
சூாியன் கரையும் கடைசி கணமும்
மீன்கள் கொத்தும்

துப்பாக்கிகள் அதிரத் தொடங்கிய காலம்
குளத்தின் மட்டம் இறங்கிற்று
சூிக்குள் மனித எலும்புகள் தூித்தி நின்று
பாசியின் நிறம் சிவப்பாகி வெளிறியது

குளத்தின் முகத்தில் படைமுகாம் முளைத்ததும்
ஆட்கள் வருவது புள்ளியாய் சிறுத்தது
காடையும் கீச்சானும் காடேகிப் பறந்தது

இப்போதும்
மழையில் குளம் மிதந்து
மீன்களும் குதிக்கிறது
காவலரணில் துப்பாக்கி நீண்டுள்ளது

கரையில் கொக்கும் காத்திருக்கிறது
யாரும் வருவதாயில்லை
பேய்க் காற்று வீச பெரும் மழை பொழிகிறது

அலறி, இலங்கை

Series Navigation