மாடல்ல! மனுஷிதான் நான்!

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

மங்கை பசுபதி


மாடல்ல, நீங்கள்
பல்பிடித்து விலைபேச!
ஆடல்ல நீங்கள்
விரல்மறைத்து விலைபேச!
உம்மைப்போல் நாங்கள்
உயிருள்ள பிறவிகள்தாம்!
ஐரோப்பா மண்டலத்தில்
பிறந்திருந்தால் நாங்கள்;
விலைபேச வருவீரா ?
வரும்நேரம், நாங்கள்
வீட்டில்தான் இருப்போமா ?
இருந்தாலும் –
உம்மைத்தான் மதிப்போமா ?
காலம்தான் மாறிடினும்
இந்தியர்கள் மாறவில்லை!
‘ ‘கழிப்பிடம் சென்றுவந்தால்
கைகழுவவேண்டும் ‘ ‘ என்று
விளம்பரங்கள் இந்தநாளும்
‘பிரச்சார பாரதி ‘யில்!
கைகழுவி வாருங்கள் – பின்னர்
பெண்ணின்விலை பேசுங்கள்!
பீகார், ராஜஸ்தான்,
ம.பி., உ.பி. –
இங்கெல்லாம்
கற்றவர் விகிதம் குறைவு!
தமிழகம் கேரளம்
வங்கம்இம் மூன்றும் – கல்வி
அறிவு பெற்றோர் அதிகம்
கொண்டும்
திருந்தவிலை இன்னும்தான்
முழுதாய்!
முப்பத்து மூன்று
பெர்செண்ட் இன்னும்
சித்திக்க வில்லையே
பையா! நீ
ஆணாக வில்லையே
இன்னும்!- நல்ல
ஆணாக இருப்பவர்கள்
பெண்களுக்கு – முந்தி
ஏற்ற இடம்
தருவார்கள் அன்றோ ?
பெண்ணை மதிக்காத தேசம்
பாழ்பட்டுப் போகும் என்று
மண்ணில் உரக்கவே சொல்லுங்கள்!
தனைப்பெற்ற தாயைப்
போன்றவர்கள் பெண்கள் – என்று
உணராத ஆணும்ஒரு ஆணா ? – தன்னை
மதிக்காமல் வாழ்பவளும் பெண்ணா ?
—-
kodaikanaldogyellow@yahoo.co.in

Series Navigation

மங்கை பசுபதி

மங்கை பசுபதி