அஸ்காரிக்கு மற்றுமொரு வழி

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

இரா. நாகேஸ்வரன்


—-

ஓடிய வலி நின்கால் தன்னில்,
ஓலங்களிட்டு ஓடிய பாதைதனிற் கண்டப்
பாலைக் கள்ளியும் பால்வற்றிப்
பற்றி எரியும், நின் நிலை அதற்காயின்:

பழகிய நிலம்விட்டு-குழந்தைகளின்
பாலுக்கும், கவளச் சோற்றுக்குமாய்-
பஞ்சம் கண்டப் பொழுதுகளே போல்-
பனித்தக் கண்களுடன்…

பட்டபாடு கொஞ்சம்நஞ்சமன்று – எனினுங்கணிதப்
பாடங்கள் கூறுவதைப் பொய்யென்றாக்காயோ அஸ்காரி!
பாங்கான சமூகம் சமைக்க-
பழிதீங்கு எண்ணாது,
படித்தறிந்தப் பாடங்களை
நடுத்தெருவி லிருத்தப்பட்டக் கணங்களை,
நல்வழியில் இயம்பி,
வஞ்சம்தனையிடாயோ, நஞ்சினை இருத்து ?!
இவ்வஞ்சம் வீண்கொலைகள் செய்திட அல்ல-நின்வாழ்வு
இழிவாய் நடத்திய சாராரின்
வாழ்வினும் மேன்மை பெற..

மிதிக்கக் குழந்தையைப் பெற்று,
மிதிக்க மட்டும் கற்றுத் தந்தால்;
‘மிதித்த பின் ‘ பொழுதுகளில்,
மிடறு விழுங்கி, மிரள விழித்து,
மத யானை ஆகிவிட்டால்.. ? ?
மற்றவனும் ‘மிதிக்கப் ‘ பெற்றுப்போடுவான்!!

– இரா. நாகேஸ்வரன்

சுட்டி: 1. அஸ்காரி, ‘ஓடுகிறேன் ஓடுகிறேன் ‘ – திண்ணை, செப். 01, 2005.

Series Navigation

இரா. நாகேஸ்வரன்

இரா. நாகேஸ்வரன்