நிகழ்வுகள்-2004

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

ரா.கிரிஷ்


சுடர் விட்டு எரிந்த
சின்னஞ்சிறு உயிர்களெல்லாம்
சுனாமி நீர் அலைகள் அணைத்துபிட்டுப் போன
துயர் நீங்கா ஒருநாள். . .

உயிர் கொண்டு வாழ
உழுத நிலத்திலெல்லாம்
எலி பிடித்து தின்று பாசியாறி!
வான் மழைக்காய் வாய் பிளந்து
காத்திருந்த பல நாள் . . .

பயிர் விளைந்து
அறுவடைக்காய் காத்திருக்க!
கனமழை வந்து வற்றாத நீர் வயலில்!
அழுகிய பயிரை பார்த்து அழுகையால் உழவன்
பார்த்துநின்ற நாள் ஒன்று . . .

சாலை விபத்தெல்லாம் சாதாரணம் நம்நாட்டில்!
பிரார்த்தனையோடு பயணித்த சில நாட்கள் . . .

ஆன்மீகவாதிகளாய் ஆராதனை
செய்தவரெல்லாம் அவநூறு வழக்குகளில்
இன்றும் இரும்பறைக்குள்!
இதுபோல் விந்தைகள் நிறைந்த சிலநாட்கள் . . .

கொதித்து நிற்கும் கடல் அலைகள்!
குலுங்கி நிற்கும் பூமி!
இழந்தவர்களுக்காய் கொடுத்தும், கொடுக்கவும்
காத்திருக்கும் பலகோடி கைகள் உண்டு
என் இந்திய திருநாட்டில்

எத்தனை நாடுகள் நட்புக்கரம் கொடுத்தாலும்
என் இந்திய இளைஞனின் கைகள்
கொடுப்பதில் உயர்ந்தே நிற்கும் . . .

ரா.கிரிஷ்
rgriesh@hotmail.com

Series Navigation

ரா.கிரிஷ்

ரா.கிரிஷ்