எறும்புக்கடி.

This entry is part of 24 in the series 20050520_Issue

புதியமாதவி


மும்பை

தேசிய நெடுஞ்சாலை
சிக்கனலுக்கு அருகில்
இரவு நேர கால்செண்டர்
பகலெல்லாம் தூங்கிகிறது
அவள்வீட்டு சூரியன்.

தாயின் அகாலமரணத்தில்
அவளுக்காக ஒதுக்கப்பட்டது
இந்த அலுவலகத்தில்
தாயின் இருக்கை.
கேள்விகளுக்கு விடைத்தெரியாத
அவள் வினாத்தாள்களே
அவளுக்கு
இந்த வேலைக்கான
உத்திரவாதமானது.
நேர்முகத் தேர்வில்
மொழித் தெரியாத அவள் முகம் கூட
வேலையில்லை என்றவளை
விரட்டவில்லை.

இந்த வேலையில்
அவளுக்கு வருத்தமில்லை.
ஆனால்-
எப்போதாவது அவள் நிர்வாணத்தை
எறும்புகள் கடிக்கும்
‘இவனில் எவனாவது
அப்பனாக இருந்தால். ?. ‘

—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation