நிலாவை மனசால் எாிதல்

This entry is part of 32 in the series 20050513_Issue

ஜெஸ்மி எம் மூஸா


சாளவாய்க் கசிவு கொண்டு
துயின்றதொரு சாமத்தில்
பிஞ்சுப் பிருகுகளை
துாக்கியடித்து
சுவற்றில் மூளையும் இரத்தமும்
சித்திரம் வரைந்து
அந்த வல்லுாறுகள்
கொத்தி அாியுமட்டும்
ரசித்தாயே
அமாவாசைக்குள் ஒளிந்திருந்து
இருள் கவிய, இருள் கவிய..

ஆசையாய் அரவணைத்த
இளசுகளை இழந்ததற்காய்..

மின்சாரம், அறுந்துபோன
தொண்ணுாறுகளில்
இறைவனின் பாதம்பணிந்திருந்த உயிர்களை
பள்ளிவாசலுக்குள் பாதம் மிதித்து
நுாற்றுக்கணக்கில் உதிரம் போக்கி
உதரம் சுவைத்த அரக்கர்கர்களை
பெளர்ணமியாய் வெளிச்சமிட்டு
சின்னி விரல் நீட்டி நடாத்தி
காடு சேர்த்ததற்காய்..

தனியாய்ப் பீய்த்தெடுக்கப்பட்டு
விடியுமட்டும்
நரமாமிச வேட்டையாடப்பட்டபோதெல்லாம்
வெளிச்சமிட்டு துணையாய்ச்
சிாித்திாிந்ததற்கு..

எம் முற்றமும் மிதிக்க வேண்டாம்
எவர் முற்றமும் மிதிக்க வேண்டாம்
ஒரு நாளும்
மனசால் எாிகிறேன்

ஜெஸ்மி எம் மூஸா, இலங்கை

Series Navigation