சுவாசத்தில் திணறும் காற்று

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

ஜோஸ்பின் பிரான்சிஸ்


—-

ஒன்று

சுவாசத்தில் திணறும் காற்று
சிறகடிக்கும் பூஞ்செடிகள்
நகரும் காட்சிகள்
வாசித்துப் போட்ட புத்தகங்கள்
பழகிப்போன தூக்கம்
எல்லாம் கடந்து
நினைவு மட்டும்
சுற்றி வருகிறது
எல்லா பயணங்களிலும்

இரண்டு

நல்லிரவு நேரம்
இதயம் படபடக்க
செல்கிறேன்
விலைமகளுக்கு
நன்றி சொன்னபடி.

மூன்று

மேடைப் பேச்சு
பாராட்டு மழைகள்
கைத்தட்டல்கள்
பூமாலைகள்
ஆனாலும்
வேடிக்கைப் பார்த்து
விமர்சிக்கும் கூட்டமாகவே
பழகிப் போனது
வாழ்க்கை.

நான்கு

நூறு பிறந்தநாளையும்
ஆயிரம் தேர்வுநாளையும்
இலட்சம் பண்டிகைநாளையும்
கோடி நட்பிநாளையும்
வாழ்வின் அத்தனைநாளையும்
எதிர்நோக்குகிறேன்
வாழ்த்துவது நீ என்பதனால்.

—-

Series Navigation

ஜோஸ்பின் பிரான்சிஸ்

ஜோஸ்பின் பிரான்சிஸ்