பழைய மின்சாரம்

This entry is part of 64 in the series 20050113_Issue

ம.நவீன்


முன்பே தொடங்கியிருக்கவேண்டும்
மின்சாரம்
தன் வேலையை !

அதுவாய் தன்னைப் பிரகடனப்படுதியப்போது
உணரப்படவில்லை
உயிர்மையை!

அது அதுவாய் இருந்தபோது
நிரம்பிய சக்தியோடு
மிகப்பெரிய சுழற்சியாய் !

அகத்தியம் சொன்னதாய்
தொல்காப்பியர் வழி தொடங்கியது
மினுமினுப்பு வேலைகள்!

அதன் பிறகு
கம்பன், இளங்கோவென
விதவிதமான வடிவங்களில்..வேலைப்பாடுகளில்
விளக்குகளை பிடித்தபடி
மின்சார நினைவில்!

எல்லோருக்கும் பிறர் மெச்சலில்
பதிந்திருக்க வேண்டும்
‘மின்சாரம் என் கையில் ‘!

தொடர்ந்து
வளைந்த விளக்கு,சுழலும் விளக்கு,அமையும் விளக்கு என
எல்லோரும் கையில்
மின்சாரம் பிடித்த திமிரோடு
நிமிர்வோடு!

அநேகமாக
அனைவரும் மறந்து விட்டனர்
மின்சாரத்தை!

ம.நவீன், மலேசியா
na_vin82@yahoo.com.sg

Series Navigation