கதவைத் தட்டிய கடலலைகள்

This entry is part [part not set] of 64 in the series 20050113_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


கூற்றுவன் எழுதிய
கவிதை அது
முற்றுப்புள்ளிகள் அதிகம்

2
கடலில் சென்றவன் திரும்பியதாக
கதவைத் திறந்தாள்

வந்தது கடலலை

திருட வந்தன அலைகள்
உயிரை

3
எல்கையில் இருந்தே
வருக, பலகையில் இருந்தே
வரவேற்றவை
பிணங்களே

புதைகாட்டை நோக்கி
சிதறிய வரிசையில்
மலர்கள் அல்ல
மழலைகள்

4
கண்ணீரில் நனைந்தே அச்சேறின
பத்திரிகைகள்

5
உயிரே உடைமையாய்ப்
பிழைத்தவர்
சிலர்
குடும்பம் தொலைத்தவர்
தேடித் திரிகிறார்
பிழைத்தவர் நினைக்கிறார்
ஏன் பிழைத்தோம்

6
உலகம் திரள்க
பகைமை ஒழிக
எல்கைகள் அழிக
ஜாதி பேதங்கள் கரைக

இதயங்கள் திறக்கட்டும்
தட்டப் படாமலே

வாழிய வையகம்
வழிய மானுடம்
வாழ்வின்
கரைமுதல் கரைவரை
கரங்கள் இணைக

—-
s shankaranarayanan 2/82 west mugappair chennai 600 037
ph/res 26258289 26521944
email storysankar@rediffmail.co

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

கதவைத் தட்டிய கடலலைகள்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


1

கடலில் சென்றவன் திரும்பியதாக
கதவைத் திறந்தாள்

வந்தது கடலலை

திருட வந்தன அலைகள்
உயிரை

2
எல்கையில் இருந்தே
வருக, பலகையில் இருந்தே
வரவேற்றவை
பிணங்களே

புதைகாட்டை நோக்கி
சிதறிய வரிசையில்
மலர்கள் அல்ல
மழலைகள்

3
கண்ணீரில் நனைந்தே அச்சேறின
பத்திரிகைகள்

4
உயிரே உடைமையாய்ப்
பிழைத்தவர்
சிலர்
குடும்பம் தொலைத்தவர்
தேடித் திரிகிறார்
பிழைத்தவர் நினைக்கிறார்
ஏன் பிழைத்தோம்

5
உலகம் திரள்க
பகைமை ஒழிக
எல்கைகள் அழிக
ஜாதி பேதங்கள் கரைக

இதயங்கள் திறக்கட்டும்
தட்டப் படாமலே

வாழிய வையகம்
வழிய மானுடம்
வாழ்வின் மறுகரைவரை
கரங்கள் இணைக

—-
s shankaranarayanan 2/82 west mugappair chennai 600 037
ph/res 26258289 26521944
email storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்