அம்மா

This entry is part of 57 in the series 20041209_Issue

மதியழகன் சுப்பையா


—-

அம்மா
—-
*
அம்மாவைப் பற்றி
ஆயிரம் பேர்
கோடி எழுதியாச்சு
‘ ‘ ஆயிரந்தான் தேவடியாளா
இருந்தாலும் அம்மா அம்மாதாண்டா ‘ ‘
என்ற அம்மாவின்
கூற்றுக்கு
அப்புறம்தான்
அத்தனையும்.

—-
*
மனைவி
அம்மாவாகி விடுகிறாள்

அம்மா
பாட்டியாகி விடுகிறாள்

பாட்டி
முப்பாட்டியாகி விடுகிறாள்

பிறப்பு நிகழ
பெயர் மாறிப் போகிறார்கள்
அம்மாக்கள்

மனைவியும்
அம்மாவும்
பாட்டியும்
முப்பாட்டியும்
அம்மாவாகவே இருக்கிறார்கள்
அவரவர் பிள்ளைகளுக்கு.

—-
*
குறுக்கு மிதிக்கச்
சொன்ன போது

சேத்துப் புண்ணுக்கு
பத்துப்போட கேட்டபோது
முகம் சுழித்து மறுக்கப் பட்டிருக்கிறாய்.

மலம் துடைத்து
மூத்திரம் கழுவி
எச்சில் ஏந்தி
ஏவல் செய்கிறாய்
எழும்புருக்கி நோய்
முற்றிய நிலையில்
இருக்கும் உன்
இருபத்தேழு வயது பிள்ளைக்கு.

—-

மதியழகன் சுப்பையா

மும்பை

Series Navigation