காதல் கடிதம்

This entry is part of 57 in the series 20041209_Issue

ரஜித்


அளவு மீறினால்
அமுதமும் நஞ்சாம்

கொஞ்சம் கொஞ்சமாய்
எனைக் கொல்லும் அமுதே

நான் தொடத் துடிக்கும்
இடங்களைத் தொட்ட சுகம கேட்க
அனுப்பிவை
உன் நெற்றி தவழும்
ஓர் ஒற்றை முடி

உன் வாசம் கொண்டதிடம்
என் வசம் இழக்க
அனுப்பிவை
உன் கூந்தல் உதிர்த்த
ஒற்றைப் பூ

எப்போதாவது விழும்
பித்தானைப் பிணைக்க
அனுப்பி வை
உன் முந்தானை நூல்
ஒரு சில

என் புகைப்படம் உடுத்திய
மெழுகுவர்த்தி
இத்துடன் இணைப்பு

பற்றவைப்பதும்
பாதுகாப்பதும்
உன் கையில்

அடடா மறந்துவிட்டேன்
ருசிக்க ஆசை
உரைவாயை
உன் எச்சிலால் ஒட்டு

—-
rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation