ஏன்

This entry is part of 55 in the series 20041111_Issue

பவளமணி பிரகாசம்


தீயாய் கண்கள் எரிய
தாரையாய் நீர் வடிய
ஏன் என்னை அழ வைத்தாய் ?
ஏன் தந்தாய் வேதனையை ?
ஏது பிழை புரிந்தேன் ?
கடுஞ்சொல் கூறினேனா ?
வெறுப்பை உமிழ்ந்தேனா ?
என்றேனுமுனை ஒதுக்கினேனா ?

மணம் பரப்பினாய்
சுவை கூட்டினாய்
என் ஆற்றல் காட்டினாய்
புகழீட்டித் தந்தாய்
கைகாரி ஆக்கினாய்
பேதை நான் உன் பிரியை
மரியாதை மிகக் கொண்டேன்
உயர்வாய் உனைச் சொல்கிறேன்
ஊரைக் கூட்டி உரைக்கிறேன்

ஈரம் நெஞ்சில் இருந்தாலும்
பொறுமை ஏனோ இழக்கிறாய்
என் கண்ணை கரிக்கிறாய்
வெங்காயமே! வெங்காயமே!
ஏன் என்னை அழ வைத்தாய் ?

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation