உயிரை குடிக்கும் காதல்

This entry is part of 55 in the series 20041111_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


____
மூட்டை,மூட்டையாய்-என்
மனக்குகையுள் -உன்
நினைவுப் பொதிகள்.
நான் உன்னை வெறுத்ததாய்
எப்படி நம்ப முடிந்தது ?
உன் நினைவுகளை
கொஞ்சம்,கொஞ்சமாய்
களவாய் மீட்கிறேன்.
கண்சிமிட்டி
அருகில் வரும் போதெல்லாம்
உனை அணைக்கத்துடித்த
என் கைகள்.
சிாித்துச் சிாித்து
விரும்பியே
உன் தோளில் சாய்ந்து
கண்மூடி
காதல் கதை சொன்ன
மாலை.
வேண்டுமென்றே
உன் அதட்டலுக்கு
அழுது ,சினுங்கி
உன் மடியில்
கரைந்த பொழுது
உன் தீண்டலுக்கெல்லாம்
பொய்யாக கோபித்து
உன் தலையில்
குட்டிய பொழுது.
ஆனந்தம் ஆனந்தமாய்
கவி சொல்லி
உன் மார்மீது சாய்ந்து
உன் தலை கோதிய பொழுது…
நான் வெறுத்ததாய்
எப்படி நம்பினாய்…. ?
மூட்டை,மூட்டையாய்-என்
மனக்குகையுள் உன்
நினைவுப் பொதிகள்.
உன் நினைவுகளை
கொஞ்சம், கொஞ்சமாய்
களவாய் மீட்கிறேன்.
இக் கவிதை
உன் கைக்கு
கிடைக்கு முன்
ஓடோடி
வந்துவிடு
உயிரை
குடிக்கும்
காதலை
தந்துவிடு.
—-
thamarachselvan@hotmail.com

Series Navigation