பிரிக்க முடியாத தனிமை

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

பா.தேவேந்திர பூபதி


தனித்திருக்க முடிவதில்லை எப்பொழுதும்
தனியாக யாருமற்ற அறையில்

ஒதுங்கியிருந்த வேளையிலும்
ஒட்டிக் கொள்ளும்
யாருமில்லையென்ற பயமும்
மரணத்தின் பொருள் கூறி சென்ற பல கதைகளும்

தனித்திருக்கையில்
கூடவே இருக்கிறார்கள்
நண்பர்களும்
அவர்களது நினைவுகளூம்
ஒவ்வொருவருக்கான காரணங்களைக் கூறி
வழியனுப்பித் தாழிட்டு
வந்து அமர்கையில்
மீண்டும் வந்து கை குலுக்கும்
யாருமில்லாத அறையின்
சுவர்களில் ஒட்டிக் கொண்டிருக்கும்
வாசனைகள்

என்றைக்குமே
யாருமில்லா அறையில் கூட
தனித்திருக்க முடிவதேயில்லை
இப்பொழுதும்

(மீள்சிறகு செப்டம்பர் இதழ்)
—-
kousick2002@yahoo.com

Series Navigation

பா .தேவேந்திர பூபதி

பா .தேவேந்திர பூபதி