எங்கள் பாரதி ஒரு தென்றல்.

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

கவியோகி வேதம்


.ஆம் ஆம்!
எங்கள் பாரதிஓர் இன்பத் தென்றல் ஐயா!
தங்க மதுரையிலே தங்கிய(அ)வன் பொதிகைமலைத்
..
தென்றல்போல் கவிதராமல் தீச்சுடரா தரமுடியும் ?
என்ன அன்பர்களே! எழுச்சியுடன் சொல்லுங்கள்!
..
கண்களுக்குக் குளிர்ச்சிதரும் கானக் குயில்பாட்டில்
பண்குளிர்ச்சி,சோலை,பதமான புதுவைநகர்,
.
தென்றல்வளர் கடற்கரை, தெம்மாங்கு, மற்றும்
இன்பக் குயில்பேச்சை யெல்லாம்,தென் றல்வரியால்
..
அவன்நம்மைத் தீண்டியதால் அன்றோ அதிசயித்தோம் ?
சுவையாம்கா வியக்குயில்-என்றேநாம் சொக்கிநின்றோம் ?(அதில்)
..
மாட்டையும், குரங்கையுமே மனதார வருணித்தான்;
மாட்டையவன் பூமியிலே பொற்புடைய ஜாதிஎன்றான்!
..
காமனே மாடாகக் காட்சிதரு மூர்த்தியென
சோமபானத் தென்றலாய்ச், சுகம்வீசச் சொல்லிநின்றான்!
..
குரங்கையும் விடாமல்(அவன்) கொஞ்சுமெழில் கேளுங்கள்!
அருமையாய் மீசையும், அழகழகாய்த் தாடியும்நாம்
..
வளர்த்தாலும் குரங்கைப்போல் வலிவுண்டோ ?தாவுவமோ ?
வளர்ந்தவரம் போல்எழிலான வாலுக்குப் போவதெங்கே ?
.
என்றெல்லாம் சொல்லி இளம்சிரிப்பை வரவழைப்பான்!
இன்பவரி களில்இளங் கண்ணனையும் கொஞ்சிநின்றான்!
(அவனது)
..
கண்ணன் பாட்டே கனிவுதரும் குளிர்ப்பாட்டு!
கண்ணனைஓர் தெய்வமாய் மட்டுமே காட்டாமல்,
..
தள்ளிவைத்துக் கும்பிடஓர் சாமிஅவன் என்னாமல்,
கொள்ளைகொள்கண் ணம்மாவாய்!,குலவிநிற்கும் தந்தைஎன்றும்,
..
கையணைத்துக்,கதைசொல்லி, ஊட்டுகின்ற தாயெனவும்,
பையக் கவலைதீர்க்கும் பிள்ளைத் தோழனென்றும்,
..
எங்கிருந்தோ வந்து,யான் இடைச்சாதி என்றுசொல்லி
தங்கிநின்ற வேலையெல்லாம் சேவகன்போல் செய்தனென்றும்,
..
கண்ணக் கள்வன்வந்தே சீடன்போல் நடித்ததுவும்
எண்ண முடியாத இன்ப வரிகளினால்
..
எத்தனைத் தென்றல்களை நம்மேல் வீசுகின்றான்!
பித்தனைப்போல் ஆடவைத்தான், பக்திப் பாடல்களில்!
..
காளிப்பாட் டுபோதாதா கண்ணில் கசிவுவர ?
ஆளை அசரவைக்க முருக(ன்)துதி போதாதா ?
..
தமிழ்வாழ்த்தும், தேசீய கீதமும்தான் விதிவிலக்கா ?
அமிழ்த்திடுதே தென்றலுக்குள் அகம்மகிழ,நம்மையெல்லாம்!..
.
எனவேதான் சொல்லுகின்றேன்! இனி-அவனை ‘நெருப்புக்கவி ‘
எனஅழைத்தே தமிழாலே ஏளனம் செய்யாதீர்!..
..
நெருப்பாக அவனிருந்தால் நெருங்கி யிருப்பீரா ?
மரம்வீழ்த்தும் புயல்கவி(அவன்) என்றுசொல்லி மயக்காதீர்!
..
புயலாக அவனிருந்தால்,புதுக்கவி முளைப்பாரா ?
தயவுசெய்து சிந்தியுங்கள்!தள்ளாடி நிற்காதீர்!
..
தென்றல் கவிபாரதி! தென்றலிலே சுகம்கிடைக்கும்!
தென்றல் கவியிலிவன் தொல்லையெல்லாம் நீக்கிவிட்டான்!
..(அவனது)
பரசிவ வெள்ளமெனும் ஒருபாடல் படியுங்கள்!(போதும்)
(காவித் துணிவேண்டா,கற்றைச் சடைவேண்டா,பாவித்தல் போதும்பரமநிலை எய்துதற்கே!)
சாத்திரங்கள் வேண்டாம்,சதுர்மறைகள் ஏதுமில்லை,தோத்திரங்கள் இல்லை,உளந்தொட்டுநின்றால் போதுமடா!)
கரைந்திடுவீர்! அவனுளே!என் கட்சிக்குள் வந்திடுவீர்!
..
வாழ்க தென்றல் கவி பாரதி!
&&&&(கவியோகி வேதம்-11-09-04)
kaviyogi_vedham@yahoo.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்