வலை

This entry is part of 50 in the series 20040902_Issue

பனசை நடராஜன்


காலம்…
நம் வாழ்க்கை வழியெங்கும்
கணக்கிலடங்கா வலைகளை
விரித்து வைத்துக்
காத்திருக்கும்…!

கொள்ளை நோய்,
வெள்ளம், புயலென
எல்லா வலைகளும்
எதிர்பாராத இடங்களில்..!

முன்னறிந்தும், எதிர்கொண்டும்
நுண்ணறிவால் தப்பினாலும்..

புத்தி
தடுமாறிப் போகச் செய்யும்
‘தந்திரவலை ‘ வீசி…
நமக்குள்ளே சண்டையிட்டும்,
நச்சுப் ‘புகைப் ‘ பிடித்தும்,
மது குடித்தும் மடியச் செய்யும்!

தவிர்த்தும், தாண்டியும்,
அறுத்தும், அகற்றியும்
அகப்படாமல் ஓடுகிறோம்…!
ஒவ்வொரு நாளும்..!

உயிர் வாழ்தலுக்காக..!!!

-பனசை நடராஜன், சிங்கப்பூர்.-
(feenix75@yahoo.co.in)

Series Navigation