சிங்காரச் சிங்கை

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

நூர்ஜஹான் சுலைமான்


ஒதுக்கபட்டது போல
ஒரு காலத்தில்
வலியக் கொடுக்கப்பட்டது,
இந்தத் தீவின் விடுதலை!

அடிப்படை வளங்கள்
அறவே இல்லை,
அலைகடல் மீது
வலை வீசி
கடல் உணவு பிடித்தே
காலத்தை ஓட்டி
ஜீவனம் செய்துவந்த
சின்ஞ்சிறு தீவு சிங்கை!

கடலில் மிதக்கும்
ஒற்றை மிதவை போல
தனித்துவிடப் பட்டத் தீவினை
தத்தெடுத்துக் கொண்டார்
“லீ” என்ற மகான்!

ஆயிரம் திறன்களை
அடைகாக்கின்ற
மனிதவளம் இருக்கையில்
மற்ற வளங்களெல்லாம்
தானே வருமென்று
தன்னம்பிக்கைத் தந்தார்!

அந்த
எழுச்சிமிக்கத் தலைவர்
எமக்குள் ஊட்டிய நம்பிக்கையே
இன்று சிங்கையை
முன்னேற்றம் என்னும்
சிம்மாசனத்தில் ஏற்றி இருக்கிறது!
பழைய வரலாற்றை
மாற்றி இருக்கின்றது!!

***

“லீ “- லீ குவான் இயூ
(சிங்கப்பூரின் சிற்பி என்றழைக்கப் படும்
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர்)
-நூர்ஜஹான் சுலைமான், சிங்கப்பூர்-

chennai1980@yahoo.com

Series Navigation

நூர்ஜஹான் சுலைமான், சிங்கப்பூர்

நூர்ஜஹான் சுலைமான், சிங்கப்பூர்