துப்பாக்கி முனையில்….

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

சுஜாதா சோமசுந்தரம், சிங்கப்பூர்.


மனிதா….உனக்குள்ளா
மனம் இறுகி
பாறையாக கிடக்கிறது.
ஐந்தறிவு படைத்த
விலங்குகள்கூட தன்
வயிற்றுப்பசிக்காக தான்
விலங்குகளை வேட்டையாடுகிறது.
மனிதனை மனிதன்
வேட்டையாடும்
வக்கிரபுத்தியை
எந்த பல்கலைக்கழகம்
கற்றுத்தந்தது …. ?
துப்பாக்கி முனையில்
என் இந்திய இரத்தங்கள்;
துடிக்கிறது நெஞ்சம்
கலங்கி கதறி
நிற்கிறது உறவுகள்;
கத்தி முனையில் ..நீ
பேசும் யுத்த கதைகளை கேட்க
எங்களுக்கு அவகாசமில்லை.
இறைவன் கொடுத்த உயிருக்கு
நீ காலக்கெடு பிறப்பிப்பதா…
தீவிரவாதத்தை
உனக்கு யார்
உரிமை சாசனம்
எழுதிக்கொடுத்தது ?
நீ திருப்பியிருக்கும் கத்தி
உன்னிடம் திரும்ப
வெகுநேரமாகாது.
உயிரின் மதிப்பு
உனக்கெப்படி தெரியும்.
குடும்பங்களை மறந்து
இன்பங்களை துறந்து
பணம் ஈட்ட சென்றது
வாழ்வதற்காகதான்
உன் கத்திப்பட்டு
மாள்வதற்காக இல்லை.
வேண்டாம் விட்டுவிடு….
கத்தியை எடுத்தவனுக்கு
கத்தியால்தான் சாவு
எங்களை மகான்களா வேண்டாம்
மனிதர்களா வாழ விடு…
—-
சுஜாதா சோமசுந்தரம், சிங்கப்பூர்.

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்