சிறகுகளை விரிக்கும்போது!

This entry is part of 41 in the series 20040729_Issue

க.பிரிதீபராஜன் கணேசன்


மேற்றிசையிற் சூரியன்போய்
விழுந்து மறைந்திட்டான்
ஒளிர்விடும் சந்திரன்
எழுந்து வானை அலங்கரித்தான்

இளங்காற்றுப் பாடியது
இன்பத்தாலாட்டு!
மரங்கள் அசைந்தன
மெல்ல நடனமிட்டு!!

அமர்ந்தேன் மரத்தடியில்
கண்களை இறுக்கி
வந்ததோ மகிழ்ச்சி!
போனதோ துன்ப நிகழ்ச்சி!!

சிட்டாய் பறந்த
பட்டாம்பூச்சி
முத்தாய் விழுந்தது
உள்ளங்கையில்

பட்டாம்பூச்சியிலோ
பல பல வண்ணங்கள்!
படபடக்கும் மனதிலோ
புது புது எண்ணங்கள்!!

பட்டாம்பூச்சிக்கோ
முழுச்சுதந்திரம்!
மனிதனோ
வெறும் இயந்திரம்!!

பட்டாம்பூச்சிக்குக் கிடைப்பதோ
அளவில்லா இன்பம்!
மனிதனுக்கோ போனஸ் சம்பளம்
முடிவில்லா துன்பம்!!

நினைத்துப் பார்த்தேன்
மனித வாழ்க்கையை..
சலித்துக்கொண்டேன்
இந்த அவசர யுகத்தை!

பட்டாம்பூச்சியின் வாழ்க்கை
மனிதனுக்கு கிட்டுவது எப்போது ?
மனிதன் சிறகுகளை விரிக்கும்போது!

-க.பிரிதீபராஜன் கணேசன்
கவிதை:
சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே (16-வயதுக்கு உட்பட்ட பிரிவு) நடைபெற்ற கவிதைப்போட்டியில் முதல்பரிசு பெற்ற கவிதை. போட்டி நடக்குமிடத்தில் கவிதையின் முதல்வரி மட்டும் வழங்கப்பட்டு உடனே எழுதப்பட்ட கவிதை.
—-

prithip@hotmail.com

Series Navigation