மனம்

This entry is part of 41 in the series 20040708_Issue

பனசை நடராஜன்


நினைவுப் பெட்டகங்கள்
நிறைந்திருக்கும் சுரங்கம்,
கனவுகளை நனவாக்க
கற்றுத்தரும் அரங்கம்!

இரக்கமும், வன்மமும்
சுரக்கின்ற கேணி !
முயல முனைவோரை
முன்னேற்றும் ஏணி !

பயிர்வாடக் கண்டு
பதறுகின்ற பண்பினர்கள்,
உயிர்போகக் கண்டு
உவகைக்கொள்ளும் கொடியோர்கள்!

வேறுபட்ட மனிதர்களால்
மாறுபட்டுப் போனதற்கு
காரணமாய் அமைந்த
அருவ அவயம்!

குருதிவெறிக் கொண்டோரின்
கொடும்மனதை அகற்றிவிட்டு
மாற்று உறுப்பு சிகிச்சையினால்
வேற்றுமனம் பொருத்துதற்கு
ஏற்றவழி ஏதுமில்லை!

ஏனெனில்….
காற்றினைப் போல்
தோற்றமில்லா
கற்பனை உறுப்பன்றோ ?
மனம்!!!

– –
(feenix75@yahoo.co.in)

Series Navigation