சுமை

This entry is part of 46 in the series 20040701_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


வழக்கமாய்
ஆறு மணிக்கு விழித்து
அனைத்தும் முடித்து
அதே பேருந்து 61-ல்
அலுவலகம்…

அதே அலுவலகம்
அதே நண்பர்கள்
அதே வேலை
அடிக்கடி தொலைபேசி
அதே வருமானம்….

அன்றைக்கு மட்டும் ஏன்
என் மனசு
லேசாகிப்போனது ?

நிளுவைக் கடனில்
கொஞ்சம் அடைத்தேன்
என்ற நினைவு மின்னல்
தெறித்து விழுந்தது
அப்புறமாய்.
—-
ilango@stamford.com.sg

Series Navigation