ஆறுதலில்லா சுகம்

This entry is part of 47 in the series 20040624_Issue

சாமிசுரேஸ், சுவிஸ்


அந்த நிழலில்லாத
இரவுக்கரையோரம்
மெல்லிய காற்றுமொழியின்
பக்கவிளைவுப் படிமங்கள்
சுகம் கீறும்

நானும் நீயும்
காத்திருப்புகளின்
கதைகளில் நனைய
ஈரமில்லாத சில முன்னெடுப்புகள்
செத்துமடியும்

தலைசிலுப்பிப் போன
ஏதோ ஒன்றின்
அகச் சாயலில்
என் உருவம் தெரிய
மனம் பின் தெறிக்கும்

அப்போது நான்
புறந்தள்ளப் பட்டவனாய்

மெழுகுவர்த்தியின்
சாயம் புாசிய
சில பொழுதுகள்
அர்த்தமில்லாமல் கரைந்து போகும்

என்னோடு
அளவுக்கதிகமாக உறவு கொள்வது
எதிர்பார்ப்புகள்தான்

காற்றில் கரைந்து போகும்
மழைத்துளிகளின்
உடல்களாய்
என் மெய்த்தூசி
மூச்சிரைக்கத்துடிக்கும்

எல்லாம்
உனக்கான
காலக்கசிவுகளை
விரல் நகங்களால்
கிளறியபடியே

ஆனால்
அப்போதும் நான்
புறந்தள்ளப்பட்டவனாய்
—-
sasa59@bluewin.ch

Series Navigation