நாத்திக குருக்கள்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

கி. உமாமகேஸ்வரி


*

உதடுகள் அனிச்சையாய்

மந்திரம் உச்சரிக்க

நனைந்த பூணூலாய்

சுற்றிவரப் போட்டுக் கொண்ட

வறட்டுக் கெளரவ வேலி.

சந்நிதி இலக்கணம் மீறிய

அடுத்த வீட்டு வம்பும்

பார்வைப் பரிமாறல்களும்

பார்த்துப் பார்த்துப்

பழகிப்போன மனம்

கல்லூரி சேரத் துடிக்கும்

மகளையெண்ணி பெருமூச்செறிக்கும்.

ஊர்முழுக்க ரட்சிக்கும்

வினாயகர் கடாட்சம்

உடனிருக்கும் மூஷிகமாய் பூஷித்திருக்கும்

குருக்கள் மீது என்றுதான் விழும்டூ

தட்டில் விழுந்த தட்சணையைத்

தனியாய் எடுத்து வைத்து விலகி

தன்னையறியாது மனம்

காத்திருக்கத் துவங்கும்

நாளை வரவிருக்கும் வெள்ளிக்கிழமைக்காய்….
—-
umakmohan@yahoo.com

Series Navigation

கி. உமாமகேஸ்வரி

கி. உமாமகேஸ்வரி