நட்பாகுமா ?

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

பனசை. நடராஜன்


தேர் நேராய் செல்லாமல்

திசை கொஞ்சம் மாறினால்

தடைப் போட்டுத் திருப்பாமல்

தடம் புரளச் செய்யவோ!

நீர்மூடிய சேற்றினில் – நீ

நீராட இறங்கையில்

‘நில் ‘ என்று சொல்லாமல்

நீந்தென்று தள்ளவோ!

கள்ளினுள் விழும் வண்டாய் – நரிவால்

கவ்விடும் வயல் நண்டாய் – நீ

தொல்லையைத் தேடிப்போய்

‘தொப் ‘ பென்று விழுகையில்

தூரத்தே ஓடுதல் நட்பாகுமா ?!

– –

(feenix75@yahoo.co.in)

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்