சொல்லின் செல்வன்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

பசுபதி


அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்;
‘என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? ‘

தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்:
‘ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். ‘

ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;
ஞானம் கனிந்தபின்னர் நானேநீர்; நீரேநான். ‘

சிரித்தணைத்தார் ஸ்ரீராமர் சொல்லின் செல்வனை;
திருமாலாய்க் காட்சிதந்தார்; செஞ்சொற்கள் ஒலித்ததங்கே.

‘ ‘திருமால் மாருதி! ‘ திருப்பியிதைப் படித்தாலும்
‘திருமால் மாருதி ‘தான் ! தெளிந்தவர் களித்திடுக! ‘

இருநாமம் இணைந்துநிற்கும் இணையற்ற மந்த்ரமிது!
இருபோதும் ஓதுங்கள் ! இறையோடு இணையுங்கள் !

~*~o0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி