கே.கோவிந்தன் கவிதைகள்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

கே.கோவிந்தன்


வாசர்படித்தாண்டி வரும் சூரிய ஒளி 25-8-03
தேய்ந்துக்கொண்டே வரும்பொழுதில்
குட்டையான உருவம் நீண்டுவிடும்
தூரத்து இலைகள் அசையும் நிழலும்
திரியும் அங்கும் இங்கும்
கால சக்கர சுழர்ச்சியின் வேகம்
நொடியில் மாறும் திரிந்த உருவங்கள்
ஊரும் எறும்புகள், அசையும் இலைகள்
காலத்தை எண்ணாமல்
சென்ற பாதை
காற்றின் திசையில் நோக்கியபயணம்
வட்டத்தில் சிக்கிய நான்
திரிந்த உருவாமாய்
வேகக்கதிக்கு இறையாகி
முன்னுக்கும் செல்லாமல்
இடித்து செல்வோரை எண்ணிப்பார்க்கவும்
மிதிபடும் வாழ்க்கை
அசையும் நிழலுக்குள் புகுந்து
வெளிவர திணரும் புதிய நம்பிக்கை

கே.கோவிந்தன்

எனது நிழல் நீந்திக்கொண்டுருக்கின்றது
பாசி படிந்த தண்ணீர்த் தொட்டியில்
அலையில் மோதும் பாசியும்
தவழ்ந்து படிகின்றது
தொட்டியினுள்ளே சூரிய ஒளி
அலைகளின் விளிம்பில் வெள்ளிகம்பிகள்
வரண்டுவரும் ஈரக்கசிறு
வேர்களின் நுனிகளில்
சதுப்பு நிலங்கள் பாளமாய் வெடிப்பு
வரண்டு சுருங்கிய தேகம்
வற்றாத வியர்வை சிந்தினாலும்
வரண்ட ஊற்றுகள்
புழுதிபரக்கும் நீரோடைகள்

கே.கோவிந்தன்
18-8-02
கனல் விடும் கனலாய் ஊரும் வார்த்தை
உளுத்துபொன மரபோல் மனிதர்கள்களூம்
தோட்டத்தில் இலை இழந்த மரங்களூம்
ஒளிவாங்கி மிளிர்ந்த இலைகள்
ஓட்டைகள் வழியே வெளியெரி விட்டன

***
govindan56@sify.com

Series Navigation

கே.கோவிந்தன்

கே.கோவிந்தன்