சுண்டெலி

This entry is part of 50 in the series 20040226_Issue

கற்பகம்


—-
வீடெங்கும் சுறுசுறுப்பாய்
ஓடி விளையாடியது எலி.
இந்த வீட்டில் இருப்பவர்கள்தான்
தன் குடும்பத்தினர்
என்றெண்ணியது எலி.
தன் சுட்டித்தனங்கள்
எல்லாம் ரசிக்கப்படுகின்றனவோ
என சந்தோசப்பட்டது எலி.
தனக்காக அங்கங்கே
உணவு வைத்து
வளர்க்கின்ற வீட்டாரை
வாழ்த்தியது எலி.
ஒரு இரவில்
கமகமவென்று வாசம் வீச
சிறிய பெட்டிக்குள்
விருந்தோம்பலோ
என மகிழ்ந்தது எலி.
விடிந்ததும்
வெகு தூரத்தில்
காக்கைகளின் இலகுகளுக்காய்
வீசியெறிப்படுமோ…
அல்லது
கொதிக்கும் நீரால்
அபிஷேகமோ என்று
எலிக்குத் தெரியாது பாவம்.
உணவு கொடுத்தவர்கள்
இந்த ஜன்னலைத்
தாளிட்டுவிட்டார்களே
என்று மட்டும் எண்ணி எண்ணி
கம்பிகளைக் கடிக்கிறது எலி.

—-
karpagam610@yahoo.com

Series Navigation