கிராமத்தில் உயிர்!

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

கவியோகி வேதம்


நகரத்தை நோக்கி நாம்வந்து விட்டதால்
கிராமம் அழிந்ததுஎன கிறுக்கன் ஒருவன்சொன்னான்!
.
மடையனிவன்!தன்னுடைய வயிற்றுக்காய் நகர்வந்த
முடைநாற்றம் வீசுகிற,மூக்குபொத்தி நீர்உறிஞ்சி,
.
அலைச்சலில் முங்கிவிட்ட, அழகுணர்ச்சி இழந்துவிட்ட
புலையனிதைச் சொல்கையில், புரண்டதடா கவியுணர்வு;
.
கிராமம் என்பது ஆன்மாவின் கிளர்ச்சியடா!
புறாக்களின் கிசுகிசுப்பு!பொழுதெல்லாம் விளையாடும்
.
கள்ளமற்ற சிறுவரின் தெய்வீகக் கொண்டாட்டம்!
புள்ளினங்கள் குட்டிச் சுவரெல்லாம் ஆக்கிரமித்து,
.
தேவ பாை ?களைத் தேனூறப் பேசிநின்று
காவியக் கலவியிலே செங்கல்லுக் குயிரூட்டும்
.
கோடிசுகம்;அதோஅந்த ஆலமரத்தில் தலைகீழாய்த்
தோடிராகம் தொங்கியிசைக்கும் குரங்குத் துள்ளல்!
..
நாளும் சந்தோ ?ம் தொலைத்துவிட்ட நகரத்தான்
தோளில் பையோடு வந்தால் விரட்ட என்றே
..
நாக்கை நீளமாய்த் தொங்கலிட்டு நடுங்கவைத்து
போய்க்கோடா உன்நரகம்! எனத்திருப்பும் அய்யனார்சிலை!
..
கடுங்கோடை யிலும்ஓடும் கடைமாற்று வாய்க்கால்;
பொடிசாய்ப், பளபளத்துக் கொஞ்சுகின்ற மீன்பாய்ச்சல்!
.
புயலின் ஓசையிலே பொலபொலென்று உதிர்ந்தாலும்
குயவன்கையில் களிமண்போல் கொஞ்சூண்டு முதுகுகொண்டு
.
களியாட்டம் போடும்அணில்கட்குக் காப்பிடம் தரும்
ஒளிஓடும் பழங்கோவில்;உள்ளே தன் தேவியுடன்,
.
இடைஞ்சல் ஏதுமின்றி எழில்கொஞ்சல் செய்யும்சிவன்!
படைதிரள வைத்துப் பாசத்தைப் புரளவைக்கும்
.
கிராமத்துத் திருவிழா!என்று… இத்தனை கிளர்ச்சிசெய்யும்,
மராமத்து புரியும் என் மன்மதக் கவிதைக்கும்
.
உயிரூட்டும்,சொர்க்கபுரிக்(கு) ஒளியூட்டும், இதோஇந்த
ஒயிலையா,மயில்தோகை உல்லாசத்தை யா,வந்து
.
அழிந்ததுஎன்று பல்தேய்க்க அடிநீர்இன்றி முனகும்
சுழிஒழிந்த ‘கல்மாடன் ‘ நீ! சொல்லப் போச்சுது ?
.
சுணங்கா! மூச்சடைத்தால் சொர்க்கத்தில் கிஞ்சிற்றும்
உனக்கிடம் கிடையாதடா ஓணானே! போபோ!
****(கவியோகி வேதம்)16-02-04
.

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்