இன்னும் காயாமல் கொஞ்சம்!!

This entry is part of 46 in the series 20040129_Issue

வேதா மஹாலஷ்மி


=====================

ஈரம் இன்னும் காயவில்லை
எப்போது முத்தமிட்டாய் நினைவில்லை!
உதடுகள் சேர்ந்து உயிர்வரை அழுத்த
மெல்ல மெல்ல நாணம் தோற்று, இளமை துடிக்க…
நான்கு இமைகள் கூடிக் கலந்து
நாலாயிரம் உணர்வாய் பெருக்கெடுக்க,
நாசி நுகரும் சுவாசம் தகிக்க
விழிக்கருக்குள் விழி கலக்க
விடை தெரியாமல் நான் விழித்திருக்க
வார்த்தையில் வடிக்க வழியறியாமல்
என் உயிர்வரை தொட்டு
எப்போதோ முத்தமிட்டாய்.. நினைவில்லை!
ஏனோ, கண்களில்
ஈரம் இன்னும் காயவில்லை…
———————————————-
piraati@hotmail.com

Series Navigation