உருளும் உலகே

This entry is part of 45 in the series 20040122_Issue

சத்தி சக்திதாசன்


மனத்திலிருத்தும் உண்மை எனும் இறை
மாட்சிமைகொள் மனித வாழ்க்கை
இறந்தும் வாழும் உத்தமர் ஓர் நூறும்
இருந்தும் இறக்கும் சுயநலர் ஒரு கோடியாம்
இதயம் என்றொரு பாறை இடிகளைத் தாங்கியும்
தவறியும் ஒருநாள் இடரினைப் புரியார்
வாழ்வுநதியில் நீச்சல் என்றே துணிந்தவர்
வழி பல கடப்பர் – ஒற்றே
நோக்கும் ஒன்றே கருத்தும் நித்தமும் கொண்டோர்
நேரியவழியே தம் சீரியவழி என்பார்
சிந்தனைக்கடலில் மானிடர்தாம் மூழ்கி – வெற்று
சிற்றின்பமெனும் சொட்டுத்தேனை பருகிடுவர்
ஆயிரம் மனிதர் அவர்தம் குணங்களும் ஆயிரமாகும்
ஆயினும் உலகு உருண்டு கொண்டேயிருக்கும்.

———————————–
sathnel.sakthithasan@bt.com

Series Navigation