உண்மையொன்று சொல்வேன்

This entry is part of 45 in the series 20040122_Issue

சத்தி சக்திதாசன்


உள்ளத்தைத் திறந்தின்று உன்னிடம்
உண்மையொன்று உரைத்திடுவேன்

நெஞ்சத்திரையொலொரு நிழற்படம்
நேற்றோடு தூக்கம் மறந்து சிவந்தன – விழிகள்

உணவை மறந்த காரணமே இன்றோடு
உணர்ச்சிகள் நிலையற்று போன நிலை

கனவுகளை மூட்டையாய் என்னிதயம் கட்டி – அதற்கு
கன்னியுந்தன் பெயராலே அர்ச்சனை நடத்திற்று

வில்லுக்கு விஜயன் என்றவொரு வாக்கியம்
வித்தகி உன் பார்வைக்கு முன்னால் பறந்திற்று

காதல் என்ற சொல்லுக்கு புதுஅர்த்தம்
கண்டுபிடிக்க ஓர் புது உணர்வு கொடுத்தாயே

மேகத்தில் மறையும் அந்த ஆதவனை
மோதத்துடிக்கும் என் புதியதொரு வீரமடி

புதுவர்ணம் உன் பெயரால் நான் படைத்து
பூசி மகிழ்ந்திடுவேன் தாஜ்மகாலின் சுவர்களுக்கே

காதலி நீ எனக்கு கொடுத்ததிந்த மையலது
கணநேர தக்குதலால் விளைந்ததொரு இன்பமன்றோ.
————————————————————————–
sathnel.sakthithasan@bt.com

Series Navigation