வாருங்கள்

This entry is part of 52 in the series 20040108_Issue

பவளமணி பிரகாசம்


நாகரிகத்தில் அடடா! எத்தனை வகை!
நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம்
பழக்கங்கள் நூறு வழக்கங்கள் வேறு-
வணக்கம் என்று சொல்லவே
கைகூப்பி அழைக்கலாம்
கை குலுக்கி மகிழலாம்
கட்டிப் பிடித்து தழுவலாம்.
குச்சியால் சோறெடுத்து உண்ணலாம்
முள் கரண்டியால் குத்தியும் தின்னலாம்
“முழங்கை நெய் வழிய” உள்ளங்கையால்
அள்ளியெடுத்தும் சாப்பிடலாம்.

மார்க்கம் வேறு, இலக்கு ஒன்றே,
மணங்கள் வேறு, மலர்கள் நன்றே
மனங்கள் மொழி என்றும் அன்பே

சிந்து நதிக்கரையிலே, நைல் நதி ஓரத்திலே
யூஃபிரடாஸ் நதி பக்கத்திலே இன்னும்
கங்கை, யமுனை, காவேரி, வைகை
என்னும் ஆறுகளின் மருங்கிலே
புனல் தந்த செழிப்பிலே
தாலாட்டி சீராட்டி செல்லமாய்
வளர்ந்த செல்வம் நாகரிகம்-
கடல் கொண்ட பின்னாலே,
புதையுண்ட பின்னாலே,
குண்டு துளைத்த பின்னாலே,
தத்தளிக்கும் ஓடமாய் தடுமாறலாமோ ?
தொலைந்து போன துடுப்புகளை
தேடி எடுத்திடுவோம் வாருங்கள்!
————————————————
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation