மூன்று

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

ரஜித்



காக்கவேண்டிய மூன்று
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு

கழிக்கவேண்டிய மூன்று
கவலை
கண்ணீர்
பயம்

போற்றவேண்டிய மூன்று
ஊருக்காய் வாழ்தல்
உபரியை ஈதல்
குடும்பமே ஒரு
கோயிலாய் வாழ்தல்

புகழவேண்டிய மூன்று
எளிமையாய் இருத்தல்
எவரையும் மதித்தல்
ஏழையின் சிரிப்பில்
இறைவனைத் தொழுதல்

மறக்கமுடியா மூன்று
செப்டம்பர் பதினைந்து
செப்டம்பர் பதினாறு
செப்டம்பர் பதினேழு

இப்படிப்பிறக்கமுடியா மூவர்
அண்ணா
லீ குவான் யூ
பெரியார்


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

ரஜித்

ரஜித்

மூன்று

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

அனந்த்


முக்கட் பெருமானின் மூத்த புதல்வனே
முக்கனி கையமர்ந்த மும்மதத்தோய் – முக்காலம்
முத்தமிழில் மூழ்கியிவண் மூவகைப்பா ஆற்றுதிறன்
இத்தமியன் எய்தஅருள் தா

மூன்றில் ஒருவன்நால் வேதம் முழுதும் மொழிந்ததனால்
நான்கின் உயர்ந்தது மூன்றென நானிலம் நன்கறியும்!
மூன்று விதஒலி மோத விளையும்ஓம் மூவுலகும்
தோன்றி இருந்துபின் ஓய்ந்திடும் என்பதைச் சொல்லிடுமே

மூன்றின் பெருமை மொழிந்திடுதல் – அந்த
….. மூவர்க்(கு) ஏலா(து) ஏனெனில்அம்
மூன்று விளைந்த முறையினையே – யாரே
….. முற்றும் உணர்தல் சாத்தியமாம் ?
ஆன்றோர் அறிந்து பகர்ந்ததனால் – மூன்றின்
…. ஆழம் தெரிதல் ஆகு(ம்)முன்னம்
தோன்றிய ஒன்று ‘பிரமம் ‘அது – ‘மாயை ‘
…. சூழ்ந்(து)அ(து) ஆனது ‘சீவ ‘னென.

ஒன்றுமற் றொன்றோ டிணைந்துபெறும் ஒன்றினால்
என்றும் பெருகின்ற இன்பம்தான் – இன்றேல்இங்(கு)
இல்லறம் எங்ஙன் இயங்கும் எனவேமூன்(று)
இல்லையேல் இல்லை எழில்.

ஆற்றல் பொருள்நல் அறிவென மூவகைத் தாகஅன்னை
தோற்றம் எடுத்துநம் துன்பம் அகற்றிநாம் தோல்விகிட்டா(து)
ஏற்றம் அடைந்(து)அறம் இன்பம் பொருளிவை எய்தியொளி
நாற்றம் சுவைமூன்றும் நாமுறு மாறவள் நல்கினளே

வள்ளுவன் கம்பன் பாரதியும் – தம்
வாக்கிலிம் மூன்றை வடித்துளர்காண்
அள்ளிடக் குறையா அமுதமென – தமிழ்
அளித்தஇம் மூன்று கவிமணிகள்
உள்ளம்சொல் செய்கை மூன்றினையும் – நாம்
உயர்த்திடும் வகையில் பாட்டிசைத்தார்
கள்ளமும் தவிர்க்கக் காந்திமகான் – வாழ்ந்து
காட்டிய வழியும் இதுஅல்லவோ ?

முதலும் நடுவும் முடிவுமென மூன்றும்
எதிலும் இருத்தல் இயல்பே – அதனால்
முயலும் பணிகளை மும்முறை செய்தால்
பயன்திண்ணம் என்றிடுவார் பார்

அறிவியல் துறையில் வல்லுநர்கள் – கண்ட
…. அற்புதம் ஆங்கோர் அணுஉடைந்து
தெறித்திடும் மூன்றில் நடுத்துகளில் – ஒரு
…. துருவமில் லைஇ(து) அறிந்துநம்முள்
உறைத்திடும் எதிர்மா(று) உணர்ச்சிகளால்- உளம்
…. ஓயவொட் டாமல் பகைமையினை
அறுத்திடும் நல்ல நடுநிலையில் – நின்று
…. ஆற்றிடு வோம்நம் கடமையையே!
(வே.ச. அனந்தநாராயணன்)
—————————————————————-
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்