பரவச கவிதைகள் சில

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

அதியமான்


1) உள் நோக்குதல்

உள் நோக்கின்
சட்டென மறையும்
உடல் எரிக்கும் காமம்
உள்ளம் எரிக்கும் காதலோ
உலையில் தள்ளும் உயிரை
உள் நோக்கின்.

***************************
2) விமானப்பயணம்

மிதக்கிறது என்னுடல்
உன் நெற்றித் திலகமாய்
தொடுவானின் ஒரு பக்கம் சூரியன்
குளிர்ந்த முகமாய் வெண்ணிலா எதிர்பக்கம்
ஜொளிக்கும் கரு வைரங்களாய் மீன் கண்கள்
குவிந்து கவிந்த மேகத்திரள்கள்
பரந்து விரிந்த உன் ஆகாச மார்பில்
எதையோ தேடி தேடி
அலைகிறது எனதுயிர்

************************

3) மலைகளுக்கிடையில்

திரண்டெழுந்து நிற்கும் மலைகள்
மலைமுகட்டில் இருந்து கீழே
இறங்கி விரியும் பள்ளதாக்குகள்
வளைந்து நெளிந்து இறங்கும் சிற்றாருகள்
அடர்த்தியான புதர்க்காடுகள்
செழிப்பான சந்தன மரங்கள்
இவைகளின் நடுவே எனது பயணம்
உன் செம்பொண் முகச்சூரியனைப் பார்த்தபடி,
மணங்கமழும் உன் சுவாச தென்றலை நுகர்ந்தபடி.

*****************
msksam@hotmail.com

Series Navigation

அதியமான்

அதியமான்