இணையம்

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

நெப்போலியன்


ஹே…

ஹாய்…

தயவுசெய்து… வயது…
ஆணா – பெண்ணா ?

நீ…

முதலில் நீ…

சரி… 12 / ஆண்…

அப்படியா… ம்…

நீ…

அவசரப்படாதே… 11/ பெண்…

நிஜமாய்…

பொய்யில்லை…

பார்க்க எப்படி இருப்பாய் ?

கொஞ்சம் அசிங்கமாகவும்
கூடுதல் அழகாகவும்… நீ ?

சராசரி அழகு… சரி ஆண் சினேகிதர்கள் உண்டா ?

ம்… மூன்றுபேர் உனக்கு பெண் சினேகிதிகள் எத்தனை ?

ஐந்துபேர்… வெளியே செல்வதுண்டா ?

உண்டு… சந்தர்ப்பம் அமையும் வேளைகளில்
பெரும்பாலும் பள்ளி முடிந்து வீடு திரும்புகையில்
வார இறுதிகளில்…

எங்கே செல்வீர்கள் ?

உணவகங்கள், விளையாட்டுக்கூடங்கள்,பூங்கா,
புளோக்குகளின் கீழ், கார்பேட்டைகள், சிலசமயம்
வீட்டில் யாருமில்லையென்றால் !

யேய்… சரி சரி ஆணுறை அணியாமல் அனுபவம் உண்டா ?

ம்… இரண்டு தடவை…

எப்படி இருந்தது…

குதூகலம் !

உனக்கு…

கொஞ்சம் பயம் இருந்தாலும் மிகவும் சுவராஸ்யம்…

இப்பொழுதாவது உண்மையைச் சொல்
நீ எங்கிருந்து ?

இங்கிருந்துதான் இனியவளே
என் எண் 92103906…

நானும் இங்கிருந்துதான் அன்பே
என் எண் 97792330…

இந்தவாரம் சந்திக்கலாமா ?

முடியும்…

ஏமாத்திடமாட்டாயே…

நீ…

நிச்சயம் மறக்கமாட்டேன்…

சரி… சரி… அம்மா வர்றாங்க…

என்னுடைய முத்தங்கள் உன் இதழ்களுக்கு…

உனக்கும்தான்…

விடைபெறுகின்றேன்…

நானும் விடைபெறுகின்றேன்…

விடை ?

—- நெப்போலியன்,சிங்கப்பூர்
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்

இணையம்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

பவளமணி பிரகாசம்


அல்லும் பகலும் தூங்காதிருக்கும்,
ஆணையும் பெண்ணையும் கவர்ந்திடும்,
இண்டு இடுக்கிலும் நீக்கமற நிரையும்,
ஈர்க்கும் விதத்திலே போதைபழக்கமொக்கும்,
உலகை விரல் நுனியில் நிற்க வைக்கும்,
ஊர் வம்பிற்கும் உகந்ததோர் மேடை,
எண்ணங்களின் ஒப்பற்ற வாகனம்,
ஏவல் முடித்திடும் அற்புத பூதம்,
ஐயங்கள் தீர்த்திடும் அதிசய ஆசான்,
ஒலியும் ஒளியும் விருந்திடும் ஊடகம்,
ஓய்வு உழைப்பு இரண்டிற்கும் களம்,
ஒளடதமாகும் தனிமைத் துயருக்கு,
அஃறிணை என்றதை எண்ண முடியவில்லை.
———
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்