ஆதாரம்

This entry is part of 55 in the series 20031211_Issue

வை.ஈ.மணி


இருக்கையில் அமர்ந்து இரவின் தனிமையில்
…..இயற்கையை ரசித்து இன்புற் றிருக்கையில்
அருகினில் மனையின் திறந்த திண்ணையில்
…..அழகிய சிறுமி அச்ச மின்றியே
விரல்களின் நுனியால் வருடி மகிழ்வுற
…..விசையுடன் தூணை வட்டம் சுற்றிடும்
பரவசம் ஊட்டும் அரிய காட்சியில்
…..பளிச்சென மனதில் பசுமை மிளிர்ந்தது. (1)

உறுதுணை அத்தூண் என்ற உறுதியும்
…..ஒருகணம் போலும் பிறழா கவனமும்
சிறுமியின் ஆட்டம் சிறப்பு எய்திடச்
…..செய்ததின் பொருளை உணர்ந்து மனிதனின்
ஒருமுக மனதும் இறைநம் பிக்கையும்
…..ஒன்றிடின் வாழ்க்கை என்றும் நலமுறும். (2)

—————-
ntcmama@pathcom.com

Series Navigation