இறங்கிய ஏற்றம் :

This entry is part of 40 in the series 20031204_Issue

அவதானி கஜன்


————–
மண்ணை நோக்கி வேர்
விண்ணை நோக்கி மரம்
சுமை ஏற்றப்பட்ட தட்டு
இறங்கி நிற்கும் தராசில்
மழையாய் இறங்கும் நீர்
தழைக்க ஏறும் தாவரத்தில்
ஏற்றப்பட்ட பட்டம்
இறக்கத்தில் கொள்ளும் அமைதி
ஏற்றம் கொள்ளும் பெரியோர்
இறக்கத்தில் இதிகாசத்திற்கு
இடுவார் வழியை
ஆசைகளில் ஏறும் மனம்
அமைதி கொள்ளும் இறக்கத்தில்
அன்புடன்
அவதானி கஜன்
avathanikajan@yahoo.ca>

Series Navigation