நான்

This entry is part of 53 in the series 20031127_Issue

வேதா மஹாலக்ஷ்மி


உன் ஒவ்வொரு அசைவிலும்
எனக்குள் ஓராயிரம் மவுனங்கள்…
ஒவ்வொரு மவுனத்திலும்
உறங்காத மன அலைகள்….
உண்மை பிரித்தெடுக்கும்
உலகிற்குப் புரிந்ததும், உனக்குப் புரிந்ததுமாய்!
அழகிலும் ஆற்றாமையிலும்
உன் அன்பு மட்டுமே அச்சாணியாய்!
ஏங்கலும் தேம்பலும்
எதையுமே செய்வதறியா
ஏமாற்றம் பல சமயம்!
கடல்போல் உணர்வுகள்…
நதியென நனைய விரும்பி
எனக்கே எனக்கான உன் பாசமழையின்
ஒவ்வொரு துளியையும்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
எங்கெங்கோ தொலைந்தபடி நான்!

***
piraati@hotmail.com

Series Navigation