அடையாளம்

This entry is part of 53 in the series 20031127_Issue

தமிழ்மணவாளன்


————————
உங்களில் பலபேரை எனக்குத் தெரியும்
எத்தனையோ சந்தர்ப்பங்களில்
சந்தித்திருக்கிறோம்.
அறிமுகங்கள் நிகழ்ந்திருக்கின்றன
ஒன்றாகத் தேனீர் அருந்தியிருக்கிறோம்
பேசியிருக்கிறோம்
சில சமயங்களில் முகவரிகளைக் கூட
பரிமாறிக்கொண்டிருக்கிறோம்
உங்களின் அடையாளம் சிலவற்றை
நினைவில் வைத்திருக்கிறேன்
ஆயினும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
யாரேனும் அறிமுகப்படுத்த
அப்போது தான் முதல் சந்திப்பாய்
‘அப்படியா ? ‘ வென
கை கொடுக்கிறீர்கள்.
அதையொரு கெளரவமாய் நினைக்கும்
உங்களுக்கு
ஒன்று புரியவில்லை நீங்களும்கூட
புதிதாய் அறிமுகமாகிறீர்கள் தேவையின்றி.
அப்போது
உங்களின் அடையாளம்
மெல்லக் கரைகிறது என்னுள்.
—-
tamilmanavalan@yahoo.co.in

Series Navigation