கலக்கம்

This entry is part of 51 in the series 20031120_Issue

இளந்திரையன்


காலத்தின் கணிப்பு
இரண்டு உயிர்கள்
காளையுடன்
இயம தூதன்

புழுதிக் காற்றில்
அலைந்த தெருவில்
கால் புதைய
நடந்தது எருமை

உற்றுப் பார்க்கிறான்
கண்களுக்குள்
இன்றைய கணக்கு
சரி செய்யப்பட

பஞ்சடைந்த கண்கள்
பசியும் வேதனையும்
இழை அறுந்து
இற்றுப்போன நம்பிக்கை

படரும் பரிதாபமும்
உயிர் துறக்கும்
ஆசையுமாய்
உலாவரும் உயிர்கள்

கணக்கோ இரண்டு
கலங்கி விட்டவன்
கணப் பொழுதினில்
கனத்தது கண்கள்

புழுதி அடங்க
மண் நனைத்து
மடிநிரப்பும்
கன மழையாய்
————–
Ssathya06@aol.com

Series Navigation